Surprise Me!

வெற்றிவேல் வீடியோ வெளியிடுவார் என்று தினகரனுக்கும் சசிகலாவுக்கும் தெரியாது - ஜெயானந்த் அதிரடி

2017-12-20 1 Dailymotion

வெற்றிவேல் பேட்டியளித்தது தினகரனுக்கும், சசிகலாவுக்கும் தெரியாது என்று திவாகரன் மகன் ஜெயானந்த் நிருபர்களிடம் தெரிவித்தார். இன்று மாலை செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதுகுறித்து கூறுகையில், சசிகலாவுக்கும், தினகரனுக்கும் அறிவிக்காமல், ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை வெற்றிவேல் வெளியிட்டுவிட்டார். வெற்றிவேல் நோக்கம் நல்ல நோக்கம் என்பதால் அதை சசிகலா புரிந்துகொள்வார் என நினைக்கிறேன்.

ஜெயலலிதா உடல்நிலை குறித்து வதந்தி பரப்பப்பட்டது. வெற்றிவேல் இந்த சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால்தான் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதற்கும் தேர்தலுக்கும் தொடர்பு இல்லை.
இதுகுறித்து தினகரன் இப்போது பேட்டியளித்தால் அதை காரணமாக வைத்தே தேர்தலை நிறுத்த திட்டமிடுவார்கள் என்பதால், வீடியோ பற்றி தினகரன் இப்போது கருத்து கூறவில்லை. தேர்தல் முடிந்த பிறகு தினகரன் கருத்து கூறுவார் என்றார்.

Diwakaran's son Jayananth told reporters that Dinakaran and Sasikala did not know about Vetrivel interview and the relasing of Jayalalitha video

Buy Now on CodeCanyon