ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் வாக்குகளை அள்ளுவதற்கு அவரது ஆதரவாளர் வெற்றிவேல்தான் காரணம். வெற்றிவேல் வெளியிட்ட ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோதான் தினகரன் வாக்குகளை குவிக்க காரணம் என கூறப்படுகிறது.
ஆர்கே நகர் தொகுதிக்கு பெரும் இழுபறிக்கு பின்னர் கடந்த வியாழக்கிழமை தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் போட்டியிட்ட அனைத்துக்கட்சிகளும் சூறாவளி பிரச்சாரம் செய்தன.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதி என்பதால் ஸ்பெஷலாக பார்க்கப்பட்டது ஆர்கே நகர். இடைத்தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றி ஜெயலலிதாவுக்கு பிறகு தாங்கள்தான் என காட்டிக்கொள்ள மும்முரமாக இருந்தன அரசியல் கட்சிகள்.
சசிகலா சிறைக்கு சென்றபின் அதிமுகவுக்கு தலைமை வகித்தார் டிடிவி தினகரன். ஆனால் அவரது தலைமை நீடிக்கவில்லை
ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட , 10 ஆண்டுகளுக்கு மேலாக கட்சியிலேயே இல்லாத தினகரன் தலைமையில் பணியாற்ற மூத்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆட்சியும் கட்சி மற்றும் சின்னமும் கை நழுவி போனது.

TTV Dinakaran supporter Vetrivel is reason for the victory of Dinakaran. Vetrivel released Jayalalitha video one before of the RK Nagar by poll.