ஆண் போல வேடம்போட்டுக் கொண்டு 3 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய கில்லாடி ஆந்திரா இளம்பெண் போலீசில் சிக்கியிருக்கிறார். ஆந்திராவின் புலிவேந்துலா மில் ஒன்றில் பணியாற்றிய நபர், 17 வயது சிறுமியிடம் ஆசைவார்த்தை காட்டி திருமணம் செய்திருக்கிறார். திருமணம் செய்த உடனேயே வெளியூருக்கு செல்வதாக கூறிவிட்டு எஸ்கேப்பாகிவிட்டார்.

2 மாதங்களாகியும் அந்த நபர் திரும்பாததால் பெற்றோரிடம் சிறுமி தெரிவித்தார். இது தொடர்பாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து அந்த நபரை சொந்த ஊருக்கு தந்திரமாக வரவழைத்த போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில்தான் சம்பந்தப்பட்ட நபர் ஒரு இளம்பெண் தெரியவந்தது போலீசாருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அத்துடன் இதேபோல் ஆண் வேடமிட்டு ஏற்கனவே 2 பெண்களை திருமணம் செய்திருப்பதாகவும் ஒப்புக் கொண்டிருக்கிறார். இது தொடர்பாக போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Andhra police arrested a teenage girl for married three women.