கார் விபத்தில் பலியான தனது ரசிகர் மன்ற நிர்வாகியின் உடலை பார்த்து நடிகர் கார்த்தி கதறி அழுதார். கார்த்தி ரசிகர் மன்றத்தின் திருவண்ணாமலை மாவட்ட தலைவராக இருந்தவர் ஜீவன் குமார்(27). அவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது. திருமண விழாவில் கார்த்தி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
ஜீவன், கார்த்தி ரசிகர் மன்றத்தை சேர்ந்த 3 நண்பர்களுடன் காரில் சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு பயணம் செய்துள்ளார். அப்போது அந்த கார் விபத்துக்குள்ளானது.
கார் விபத்தில் ஜீவன் குமார் பலியானார். அவருடன் பயணம் செய்த 3 பேர் காயம் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஜீவன் குமாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த கார்த்தி நேற்று திருவண்ணாமலை சென்றார். ஜீவன் குமாரின் உடலை பார்த்த கார்த்தி கதறி அழுதார். அவரை பார்த்து ஜீவன் குமாரின் உறவினர்கள் கதறி அழுதார்கள்.
என்ன முக்கியமான வேலையாக இருந்தாலும் இரவில் பயணம் செய்ய வேண்டாம். இரவில் பயணம் செய்தால் தூக்க கலக்கத்தில் விபத்து ஏற்படக்கூடும். ஜீவன் குமாருக்கு 2 மாதத்திற்கு முன்பு தான் திருமணம் நடந்தது. இந்த குடும்பத்தை நான் பார்த்துக் கொள்வேன். ஆனால் அவரின் இழப்பை ஈடுகட்ட முடியாதே என்று கார்த்தி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.