Surprise Me!

படத்தை தொடர்ந்து கண்காட்சிக்கு ஏற்பாடு செய்த வேலைக்காரன் படக்குழு !!- வீடியோ

2017-12-27 1 Dailymotion

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த படம் 'வேலைக்காரன்'. இப்படம் தற்போது பலரது பாராட்டுக்களை பெற்று திரையரங்குகளில் வெற்றிநடைபோட்டு வருகிறது. இப்படத்திற்காக 8 ஏக்கரில் போடப்பட்ட குப்பம் செட் மிகப்பெரிய அளவில் எல்லாருடைய கவனத்தையும் ஈர்த்தது. இந்த செட் கலை இயக்குநர் முத்துராஜாவின் மேற்பார்வையில் பலரின் கடின உழைப்பால் உருவாகியுள்ளது.
கொலைகார குப்பம் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட 'வேலைக்காரன்' பட செட்டில் சிறிய நெருக்கமான வீடுகள், முருங்கை மரம், நாஸ்டால்ஜியா நினைவு ஏற்படுத்தும் மணி, காரை பெயர்ந்த வீடுகள் என நுணுக்கமாக உருவாக்கி இருந்தனர்.
குப்பத்து பகுதி காட்சிகள் ரசிகர்களால் மிகவும் பாராட்டப்பட்டன. இந்தப் பகுதியில் இடம்பெறும் 'கருத்தவன்லாம் கலீஜாம்' பாடலும் செம வரவேற்பைப் பெற்றது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் தற்போது வேலைக்காரன் படக்குழு இந்த 8 ஏக்கர் செட்டை, மாணவர்கள், மீடியா, ரசிகர்கள் என எல்லோரையும் அழைத்து சென்று பார்வையிட வைக்கவுள்ளது என்று ஒரு போஸ்டர் மூலம் அறிவித்துள்ளனர்.

'Velaikkaran' movie lead by Sivakarthikeyan is currently running in the theaters successfully. The slum set, which were put up in 8 acres for the film, attracted everyone. In this case, #VelaikkaranSetVisit for media, students, fans and public start soon.

Buy Now on CodeCanyon