சரசரவென்று செல்லும் வாகனங்கள்… எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம்… கண்களை கொள்ளை கொள்ளும் மலர்கள்… என்று எந்நேரமும் பரபரப்பாக காட்சியளிக்கும் ஊட்டியில் கடும் பனிப்பொழிவினால் சாலைகள் வெறிச்சோடியது. குளிரினால் மக்களும் சுற்றுல்லா பயணிகளும் குன்னி குறுகி அறைகளுக்கு முடங்கி கிடக்கும் நிலை.

முன்பெல்லாம் நீலகிரி மாவட்டத்தில் டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை குளிர் வாட்டி வதைக்கும். ஆனால் தற்போது பருவமழை பெய்ததாலும் புயல் சின்னம் உருவானதாலும் தட்ப வெட்ப நிலை மாறி பனிப்பொழிவு முன் கூட்டியே ஆரம்பித்து விட்டது. கடந்த வருடம் வரை இதமான பனி பொழிவே இருந்தது. ஆனால் இந்த ஆண்டு பனிப்பொழி கடுமையாக பெய்வதால் வீடுகளுக்கு வெளியே இருக்கும் தட்டுகளில் பனித்துளிகள் பட்டு ஐஸ்கட்டிகளாக மாறும் அளவிற்கு வெப்பநிலை 5 டிகிரிக்கும் குறைவாக உள்ளது. இதனால் மலைப்பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த தேயிலை செடிகளும் காய்கறி செடிகள் கருகி வருகிறது. மக்கள் வீடுகளில் அணல் மூட்டத்தை மூட்டியும், மின்சார ஹீட்டர்களை பயன்படுத்தியும் உடலை சூடுபடுத்தி கொள்கின்ற அளவுக்கு பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

Des : Whether you see any kind of crowd, wherever you see the flowers ... the flowers that lurk in the eyes ... The people and the travelers by the cold are in a position to quench the mini-rooms.