Surprise Me!

ஜெ.,மரணம்-தினகரன் பேட்டி- வீடியோ

2017-12-28 1,114 Dailymotion

ஜெயலலிதா மரணத்தில் எந்த தவறும் நடக்கவில்லை என்றும் வீடியோவை வெளியிட்டதற்கு ஜெ.வின் ஆன்மா வெற்றிவேலை மன்னிக்கும் என்றும் தினகரன் கூறினார். ஜெயலலிதா கடந்த ஆண்டு காய்ச்சல் மற்றும் நீர் சத்து குறைபாடு காரணமாக செப்டம்பர் 22-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரது புகைப்படமோ வீடியோவோ தமிழக மக்களுக்காக வெளியிடப்படவில்லை. இந்நிலையில் 75 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு, டிசம்பர் 5-ஆம் தேதி அவர் உயிரிழந்துவிட்டார். இதையடுத்து அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக புகார் எழுந்தது. <br />இந்நிலையில் கடந்த 20-ஆம் தேதி, அதாவது இடைத்தேர்தலுக்கு ஒரு நாளுக்கு முன்னர், தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை எடுத்த போது எடுக்கப்பட்ட வீடியோ என்று ஒன்றை வெளியிட்டார். <br /> <br />அந்த வீடியோவில் நைட்டி உடை அணிந்துள்ள ஜெயலலிதா இடது கையில் ஜூஸ் குடித்து கொண்டே டிவி பார்ப்பது போன்ற காட்சிகள் சுமார் 20 வினாடிகள் இடம்பெற்றிருந்தன. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் வெற்றிவேல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. <br />

Buy Now on CodeCanyon