Surprise Me!

விளையாட தடை விதித்ததால் கதறி அழுத வீரர்-வீடியோ

2018-01-02 2,924 Dailymotion

வங்கதேசத்தை சேர்ந்த சபீர் ரஹ்மான் என்ற வீரருக்கு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதில் இருந்து 6 மாதம் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த வருடம் மே மாதம் வரை அவர் எந்த வங்கதேச போட்டிகளிலும் விளையாட முடியாது. மேலும் அவருக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த 6 மாதத்திற்குள் அவர் 1 கோடி ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் குறிப்பிட்டு இருக்கிறது. இத்தனை தண்டனைகளுக்கு பின்பும் ஒரு சிறிய காரணம் மட்டுமே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. <br /> <br />வங்கதேச அணியில் இருக்கும் முக்கியமான ஆல் ரவுண்டர்களில் சபீர் ரஹ்மானும் ஒருவர். நேற்று வரை இவர் வங்கதேச கிரிக்கெட் வாரியத்திடம் 'பி' கிரேட் ஒப்பந்தம் செய்து விளையாடிக் கொண்டு இருந்தார். மிக முக்கியமான வீரர்களுக்கு அடுத்த நிலை வீரர்களுக்கு இந்த ஒப்பந்தம் போடப்படுவது வழக்கம். இவர் அதேபோல் அவரது சொந்த ஊரான 'ராஜ்சேஹி' தேசிய அணிக்காகவும் விளையாடி இருக்கிறார். <br /> <br />

Buy Now on CodeCanyon