சர்ச்சை இயக்குனர் என அழைக்கப்படும் ராம்கோபால் வர்மா மீண்டும் ட்விட்டருக்கு வந்திருக்கிறார்.

அவர் படங்களை தாண்டி அவர் போடும் ஒவ்வொரு ட்வீட்டும் சர்ச்சையாகும். அவரது ட்வீட்டால் இதுவரை பல சிக்கல்கள் ஏற்பட்டிருக்கின்றன.

சினிமாக்காரர்களின் பல விஷயங்களை எதிர்க்கும் ராம் கோபால் வர்மா ரஜினியின் அரசியல் பிரவேசத்துக்கு தனது ஆதரவை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்தி திரையுலகில் பரபரப்பான இயக்குனராக இருந்த ராம்கோபால் வர்மா இப்போது கொஞ்சம் அமைதி காக்கிறார். அவ்வப்போது தமிழ்நாட்டு அரசியல் பக்கமும், திரையுலகப் பக்கமும் திரும்பி சர்ச்சைக்குரிய கருத்துக்களைப் பதிவிடுவார்.

ராம் கோபால் வர்மா ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு "இதுபோல் ஒரு வரவேற்பை பார்த்ததில்லை. என்னுடைய கணிப்புப்படி தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் அவருக்கு ஓட்டளிப்பார்கள். கண்டிப்பாக இது மற்ற கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்படுத்தும்" என்று தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்தைப் போலவே பவன் கல்யாணும் ஆந்திராவில் அனைத்துத் தொகுதிகளிலும் தேர்தலில் நிற்க வேண்டும். அப்படி அவர் நிற்கவில்லை என்றால் ரஜினிகாந்த் போல ஒரு தைரியம் பவனுக்கு இல்லை என அவரது ரசிகர்கள் நினைத்து விடுவார்கள்.

Controversial director Ram gopal varma supports Rajinikanths's political entry. He said, all tamil peoples will vote for rajinikanth only.