தாமரை ஒன்றும் அவமானப்படுத்தும் சின்னமல்ல, அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப செயல்படுகிறார்கள் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். பாபா முத்திரையில் இருந்து தாமரை சின்னம் நீக்கப்பட்டது குறித்த கேள்விக்கு அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Loading ad
ரஜினிகாந்த்தின் அரசியல் பிரவேசத்தின் முழு முதற் காரணியே பாஜக தான் என்று தமிழக அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் அவருடைய பாபா முத்திரையில் இருந்து தாமரை நீக்கப்பட்டு உறுப்பினர் சேர்க்கைக்கான இணையதளத்தில் பாபா முத்திரை மற்றும் பாம்பு மட்டுமே இடம்பெற்றிருந்தது, இது பலரின் கவனத்தையும் ஈர்த்தது.

இந்நிலையில் இது குறித்து திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது : சகோதரர் ரஜினி ஊழலற்ற நிர்வாகத்தை கொண்டு வருவதற்காக அரசியலுக்கு வருகிறேன் என்றார். இதனால் நாங்கள் அவரை வரவேற்றோம்.