Surprise Me!

விராட் கோஹ்லி அவுட் ஆன விரக்தியில் தீக்குளித்த 65 வயது நபர்- வீடியோ

2018-01-08 1,498 Dailymotion

இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி தற்போது நடந்து வருகிறது. இந்த போட்டி கேப்டவுனில் இருக்கும் நியூலாண்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது. கோஹ்லி தொடங்கி எல்லோரும் வேகமாக அவுட் ஆகி நடையை கட்டினார்கள். இந்த நிலையில் இந்த போட்டியை பார்த்துவிட்டு மத்திய பிரதேசத்தை சேர்ந்த பாபுலால் பைரவா என்ற 65 வயது நபர் தீ குளித்து இருக்கிறார். இவர் கோஹ்லி அவுட் ஆன வருத்தத்தில் தீ குளித்து உள்ளார். <br /> <br />இந்த போட்டியில் கோஹ்லியின் ஆட்டம் படுமோசமாக இருந்தது. இந்திய மண்ணில் செஞ்சுரிகளும், டபுள் செஞ்சுரிகளும் அடித்த கோஹ்லி இந்த போட்டியில் வெறும் ஐந்து ரன்னில் மோர்னி மோர்கல் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதனால் பலரும் அவருக்கு எதிராக கருத்து தெரிவித்தனர். <br />இந்த போட்டியை பார்த்துக் கொண்டு இருந்த மத்திய பிரதேசத்தை சேர்ந்த பாபுலால் பைரவா என்ற 65 வயது நபர் தீ குளித்து இருக்கிறார். கோஹ்லி அவுட் ஆன சோகம் தாங்க முடியாமல் அப்படி செய்துள்ளார். இவர் பெட்ரோல் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார்.

Buy Now on CodeCanyon