ரூ. 60 லட்சம் வாடகை பாக்கி வைத்துள்ள நடிகை மல்லிகா ஷெராவத்தை வீட்டை விட்டு வெளியேற்றுமாறு பிரான்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சிரில் ஆக்சன்பேன்ஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டு பாரீஸில் வசித்து வருகிறார். அவர் பாரீஸில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

பெரும் பணக்காரர்கள் வசிக்கும் பகுதியில் அவர் வசித்து வருகிறார்.

மல்லிகா கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதி அந்த வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளார். முன்பணமாக ரூ. 2 லட்சம் கொடுத்துள்ளார். வீட்டின் மாத வாடகை ரூ. 4 லட்சத்து 60 ஆயிரம் ஆகும்.

வீட்டில் குடியேறுவதற்கு முன்பு கொடுத்த ரூ. 2 லட்சத்தோடு சரி. அதன் பிறகு மல்லிகா வாடகையே கொடுக்கவில்லை. அதனால் தான் நீதிமன்றம் சென்றேன் என்று வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

தங்களுக்கு பண பிரச்சனை இருப்பதாக நீதிமன்றத்தில் மல்லிகா, சிரில் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மல்லிகா, சிரிலை வீட்டை விட்டு வெளியேற்றுமாறு பிரான்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

A court in Paris has ordered to evict actress Mallika Sherawat and her husband from their posh apartment after they failed to pay rent for a year starting from last january.