Surprise Me!

அதிமுகவில் இருந்து பேராசியர் தீரன் நீக்கப்படுவதற்கு இதான் காரணம்!- வீடியோ

2018-01-12 2 Dailymotion

அதிமுகவில் தினகரனின் ஸ்லீப்பர் செல்லாக செயல்பட்டு வந்த பேராசிரியர் தீரன் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். டிவி விவாதத்தில் தினகரனிடம் அதிமுகவை ஒப்படைக்க வேண்டும் என பேசியதாலேயே தீரன் டிஸ்மிஸ் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

அதிமுகவில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணிகள் இணைந்தன. தினகரன் தனி ஆவர்த்தனம் நடத்தி வருகிறார். அதேநேரத்தில் ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணியில் தம்முடைய ஸ்லீப்பர் செல்கள் நிறைய பேர் இருப்பதாகவும் தொடர்ந்து தினகரன் கூறி வருகிறார்.

இதனைத் தொடர்ந்து அதிமுகவில் தினகரனுக்கு ஆதரவான லேசான குரல் வந்தாலும் அவரை ஸ்லீப்பர் செல்லாக பார்க்கிற போக்கு நீடித்து வந்தது. இதனால் டிவி விவாதங்களில் பேசுவதற்கு யாரையும் அனுமதிக்காமலும் வைத்திருந்தனர்.
பின்னர் பேராசிரியர் தீரன் உள்ளிட்டோரை டிவி விவாதங்களில் பேச அதிமுக அனுமதித்தது. ஆனால் தீரனோ தொடர்ந்து தினகரனை விட்டுக் கொடுக்காமலேயே டிவி விவாதங்களில் பேசிவந்தார்.

AIADMK expelled its spokesman and former MLA Dheeran

Buy Now on CodeCanyon