Surprise Me!

இந்தியாவிற்கு எச்சரிக்கையா..வடகொரியாவுக்கு போகவே வேண்டாம்... மக்களுக்கு அமெரிக்க அறிவுரை

2018-01-12 7,077 Dailymotion

வெளிநாடு செல்லும் அமெரிக்கர்களுக்கு நான்கு விதமான புதிய கட்டுப்பாடு அறிவுரைகளை அமெரிக்க அரசு வழங்கியுள்ளது. தீவிரவாதம் என்ற ஒற்றை வார்த்தையை வைத்துக்கொண்டு உலக நாடுகளை மட்டுமல்ல, தன் சொந்த பிரஜைகளையே அமெரிக்க அரசு பயமுறுத்தி வருகிறது. குறிப்பாக இரட்டை கோபுரங்கள் இடிப்பு சம்பவத்திற்கு பின் தீவிரவாதம் என்ற வார்த்தை அமெரிக்கர்களின் வாழ்க்கையில் ஆழமாக கலந்து விட்டது. இந்நிலையில் பிற நாடுகளுக்கு சுற்றுலா செல்லும் அமெரிக்க மக்களுக்கு அந்நாட்டு அரசு ஒரு புதிய அறிவுரையை வெளியிட்டுள்ளது. அதில் பாதுகாப்பு நிலைகளின் அடிப்படையில் பயணம் செய்யும் நாடுகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. <br /> <br />முதல் நிலையில் உள்ள நாடுகளுக்கு சாதாரண முன்னெச்சரிகை நடவடிக்கைகளுடன் செல்லலாம். அதாவது அமெரிக்காவுடன் நேசக்கரம் கோர்த்துள்ள நாடுகளுக்கு முதல்நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடா, ஸ்வீடன், குவைத், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகள் இந்த பட்டியலில் உள்ளன

Buy Now on CodeCanyon