Surprise Me!

பெங்களூரு புத்தாண்டு கொண்டாட்டத்தில் காதல் ஜோடியை தாக்கியவர்கள் கைது

2018-01-16 4,657 Dailymotion

பெங்களூரில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நள்ளிரவில் இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களை தாக்கியவர்கள் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அந்தப் பகுதியில் கிடைத்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் பைக்கில் வந்தவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தியவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். தகவல் தொழில்நுட்ப நகரம் என்று சொல்லப்படும் பெங்களூருவில் ஒவ்வொரு ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நள்ளிரவில் பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறைகளும், மர்ம நபர் தாக்குதல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதே போன்று இந்த ஆண்டும் புத்தாண்டு பிறப்பதற்கு முந்தைய நாள் இரவு இளம் ஜோடிகள் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.

இந்திரா நகர் பகுதி 6வது பிரதான சாலையில் இரு சக்கர வாகனத்தை ஒரு ஆண் ஓட்டி வர பின்னால் ஒரு பெண் அமர்ந்து வந்து கொண்டிருந்தார். அவர்களின் பைக்கை நிறுத்திய மர்ம கும்பல் அந்த இளைஞரையும், இளம் பெண்ணையும் சரமாரியாக தாக்கின

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக எந்த தகவலும் கிடைக்காததால் குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் இருந்தனர். இந்நிலையில் தாக்குதல் நடத்திய கும்பலிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக டிசம்பர் 31ம் தேதி இரவு இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களை வழிமறித்து தாக்கிய காட்சிகளை ஒரு கும்பல் வெளியிட்டுள்ளது.

Bengaluru police arrested two in connection with New year's eve a couple was brutally attacked, the arrest happen on the basis of cctv footage released by a rivalry gang.

Buy Now on CodeCanyon