கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர் தன் மகனை எரித்து கொலை செய்து இருக்கிறார். சாதாரணமாக கிண்டல் செய்த காரணத்திற்காக இந்த கொலை சம்பவம் நடந்து இருக்கிறது. இந்த கொலையில் பல திடுக்கிடும் சம்பவங்கள் நடந்து இருக்கிறது. மிகவும் சாமர்த்தியமாக அந்த பெண் இந்த கொலையை செய்து இருக்கிறார். இந்த பெண் கொடுத்த வாக்குமூலம் போலீசை நடுங்க செய்துள்ளது. தற்போது இவர் மீது வழக்கு பதியப்பட்டு இருக்கிறது.

கேரளாவின் கொல்லம் பகுதியை சேர்ந்தவர் ஜெயா. 43 வயது நிரம்பிய இவர் நேற்று தன் கணவனுடன் போலீஸ் ஸ்டேஷன் சென்று இருக்கிறார். அங்கு 14 வயது நிரம்பிய தன்னுடைய மகனை காணவில்லை என்று புகார் அளித்து உள்ளார். கடந்த 24 மணி நேரமாக அவன் எங்கே சென்றான் என தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

போலீஸ் இந்த வழக்கை பதிவு செய்து விசாரித்தது. ஆனால் எவ்வளவு தேடியும் அந்த சிறுவன் குறித்த எந்த துப்பும் கிடைக்கவில்லை. எனவே போலீஸ் அந்த சிறுவனின் தாயிடம் விசாரணையை தொடங்கியது. ஆனால் அவர் ஒவ்வொரு முறையும் முன்னுக்கு பின் முரணான தகவலை கொடுத்து இருக்கிறார். இதனால் போலீசின் சந்தேகம் அதிகம் ஆகியுள்ளது.

Kerala woman named Jaya who is a resident of Kollam has killed her son. She tortured and fired him for teasing her over some silly reason. She acted in front of police. Finally she confessed the whole truth to the police