ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவை தான் வெளியிட சொல்லவில்லை என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஆர்கேநகர் இடைத்தேர்தலுக்கு ஒரு நாள் முன்பாக தினகரனின் ஆதரவாளரான வெற்றிவேல் ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதற்கு பெரும் எதிர்ப்புகள் எழுந்தன.
இது தினகரனின் வேலைதான் என அதிமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டின. இந்நிலையில் ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவை தான் வெளியிட சொல்லவில்லை என்று தினகரன் தெரிவித்துள்ளார்.
கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் திருச்சியை சேர்ந்த ராஜசேகர் என்பவர் தான்தான் வீடியோவை வெளியிட சொன்னதாக கூறுவது தவறு என்றும் தினகரன் தெரிவித்தார்.

TTV Dinakaran says I did not ask Vettrivel to release Jayalalitha treatment video. He said this in Karur.