Surprise Me!

நான் ஜாலியா சொன்னேன்-பல்டியடித்த தொட்டியம் ராஜசேகரன்

2018-01-19 35 Dailymotion

தொண்டர்களை உற்சாகப்படுத்தவே ரூ.20 டோக்கன் கொடுத்தாக பேசியதாக தினகரனின் ஆதரவாளர் தொட்டியம் ராஜசேகரன் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் முசிறியில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய தினகரன் அணியின் திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளரான தொட்டியம் ராஜசேகரன் பல்வேறு பகீர் தகவல்களை தெரிவித்தார். அதாவது ஆர்.கே.நகர் வெற்றிக்காக டோக்கன் விநியோகித்தது மட்டுமின்றி ஜெயலலிதா சிகிச்சை வீடியோவையும் தினகரன் தான் வெளியிட சொன்னார் என்றும் ராஜசேகரன் கூறினார்.
மேலும் ஜெயலலிதாவின் சிகிச்சை வீடியோ சிப்பை தினகரன் வெற்றிவேலிடம் கொடுத்தபோது தான் அங்கிருந்ததாகவும் ராஜசேகரன் கூறினார். ஜெயலலிதா வீடியோவை வெளியிட வெற்றிவேல் தயங்கியபோது ''ஒரு வழக்கு தானே பார்த்துக்கொள்ளலாம்'' என்று தினகரன் கூறியதாகவும் ராஜசேகரன் தெரிவித்தார்.

இது தமிழக அரசியல் கட்சிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியதோடு தினகரனுக்கும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது.இந்நிலையில் தான் பேசியது குறித்து தொட்டியம் ராஜசேகரன் விளக்கம் அளித்துள்ளார்.

TTV Dinakaran supporter Thotiyam Rajasekar explaines about his speech on Dinakaran. He said that to encourage their supporters only he spoken like that.

Buy Now on CodeCanyon