ஜெயலலிதா மறைவு செய்தி எனக்கு டிசம்பர் 4-ஆம் தேதி மாலை 5.20 மணிக்கே தெரிந்துவிட்டது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பகீர் கிளப்பியுள்ளார். மன்னார்குடியில் நடந்த எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் பேசிய சசிகலா சகோதரன் திவாகரன் கூறுகையில் ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 4-ஆம் தேதியே இறந்துவிட்டார். அப்பல்லோ மருத்துவமனைகளின் பாதுகாப்பு கருதி ஒரு நாள் தாமதமாக வெளியிட்டனர் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதை ஜெயக்குமார் மறுத்தார்.

இந்நிலையில் விருதுநகரில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் ராஜேந்திர பாலாஜி தெரிவிக்கையில், கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 4-ஆம் தேதி எனக்கு அவரது இறப்பு செய்தி வந்துவிட்டது. அன்றைய தினம் மாலை 5.20 மணிக்கு அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து எனக்கு வேண்டப்பட்ட ஒருத்தர் போன் செய்தார்.

அப்போது முதல்வருக்கு மாரடைப்பு ஏற்பட்டுவிட்டது. ரொம்பவும் சீரியஸாக உள்ளார் என்றார். பதறி அடித்துக் கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு போன் செய்தேன். யாரும் எடுக்கவில்லை. ஜெயலலிதாவின் தனிப்பட்ட செயலாளர் பூங்குன்றனுக்கு போன் செய்தால் அவரும் எடுக்கவில்லை.

Minster Rajendra Balaji says that Jayalalitha died on Dec 4 at 5.20 pm. I got these details from the hospital on the day itself.