ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் விஜய்யின் 62-வது படம் சமீபத்தில் பூஜையுடன் ஆரம்பமானது.
சமூக வலைத்தளங்களில் இப்படத்தின் ஷூட்டிங் புகைப்படம் சினிமா ரசிகர்கள் மத்தியில் வைரலாகப் பரவியது.
படப்பிடிப்பு சென்னையில் தொடர்ந்து நடைபெறும் எனவும், பிறகு கொல்கத்தாவில் நடைபெற இருக்கிறது எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் ஷூட்டிங்கும் பூஜையோடு தொடங்கியிருக்கிறது. இப்படத்தின் நாயகிகளாக ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். அதனால், தீபாவளியைக் கொண்டாட சூர்யா ரசிகர்களும் ரெடி.
அதே போல, முன்னணி நாயகி யாராவது ஒருவர் நடித்தால் அஜித்துக்குப் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறார்கள். அது பற்றிய எந்த அறிவிப்பும் இதுவரை 'விசுவாசம்' படக்குழு தரப்பிலிருந்து வெளியிடப்படவில்லை.
'விசுவாசம்' படத்தின் இசையமைப்பாளர் யார், ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்கிற விவரங்களுடன் செம அப்டேட் ஒன்று வரும் ஜனவரி 25-ம் தேதி வெளியாகும் எனவும் தகவல்கள் கசிந்திருக்கின்றன.

Vijay's 62nd film shooting recently started with Pooja. The shooting spot photo of 'Vijay62' goes viral on social media. Ajith fans are worried about no update from 'Viswasam' team.