Surprise Me!

எஸ்ஆர்எம் கல்லூரி மாணவன் தற்கொலை...வீடியோ

2018-01-23 1 Dailymotion

தேர்வில் காப்பியடித்ததால் ஆசிரியர் திட்டியதில் மனமுடைந்த எஸ்ஆர்எம் கல்லூரி மாணவன் விடுதியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளான். உயிரிழந்த மாணவன் மாஜஸ்டிசாய்நிக்கன் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவன் என்று தெரிகிறது. <br /> <br />சென்னையை அடுத்த காட்டான்குளத்தூர் பகுதியில் இயங்கி வருகிறது எஸ்ஆர்எம் குழும கல்லூரிகள். இந்தக் கல்லூரியில் வெளி மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் அதிகம் பயின்று வருகின்றனர். மாணவர்களுக்கு கல்லூரியில் செமஸ்டர் தேர்வு நடப்பதாக தெரிகிறது. அப்போது தேர்வின் போது ஆந்திராவைச் சேர்ந்த மாணவன் மாஜஸ்டிசாய் நிக்கன் காப்பியடித்ததாக தெரிகிறது.இதனை கண்டுபிடித்த ஆசிரியர் மாணவன் மாஜஸ்டிசாய் நிக்கனை கண்டித்துள்ளனர். சக மாணவர்கள் முன்னிலையில் கண்டித்ததால் மாணவன் மனமுடைந்து காணப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில், இன்று காலையில் விடுதியின் மாடியில் இருந்து குதித்து மாணவன் நிக்கன் உயிரிழந்துள்ளான். ஆசிரியர் திட்டியதால் மனமுடைந்து தான் ஆசிரியர் தற்கொலை செய்து கொண்டாரோ அல்லது வேறு ஏதேனும் பிரச்னை கல்லூரிக்குள் இருந்ததா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். <br />

Buy Now on CodeCanyon