Surprise Me!

உணவு டெலிவரி செய்ய வந்த ஊழியரிடம் சிக்கிய பெண்....வீடியோ

2018-01-23 1,849 Dailymotion

டிஸ்க் ஜாக்கி ஒருவர் காவல்துறையில் அளித்துள்ள புகாரில், உணவு டெலிவரி செய்யும் ஊழியர் தன்னிடம் தப்பாக நடக்க முயன்றார் என்றும், தெருநாய் ஒன்று வந்து தன்னை காப்பாற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு நகரின் மையப்பகுதி ஏரியா ஒன்றில் வசித்து வருபவர் அந்த டிஜே. இவர் தனது பேஸ்புக் பக்கத்தில் நேற்று ஒரு பதிவு ஒன்றை எழுதி இருந்தார்.

கடந்த ஞாயிறு அன்று வீட்டில் தனியாக இருந்ததால் உணவை ஸ்விக்கி.காம் (swiggy.com) என்னும் இணையதளத்தின் மூலமாக ஆர்டர் செய்ததாக தெரிவித்துள்ளார். சில நிமிடங்களில் தன்னை விக்னேஷ் என்ற இளைஞர் தொடர்புக்கொண்டு உணவு எடுத்து வந்துள்ளதாக தெரிவித்ததை தொடர்ந்து, மாடியில் வசிக்கும் தான் கீழே இறங்கி உணவை வாங்கியதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.

உணவை வாங்கிய போது, தனியாக இருக்கிறாயா என்று அந்த இளைஞர் கேட்டதாகவும், அதனை தொடர்ந்து சில அசிங்கமான வார்த்தைகளை பேசியதாகவும் தனது பதிவில் அந்த பெண் குறிப்பிட்டுள்ளார். தவறான நோக்கத்தோடு அந்த இளைஞன் நெருங்குவதை பார்த்து, தெருநாய் ஒன்று தன்னை நோக்கி ஓடி வந்து குரைத்ததால், இளைஞன் பயந்து அந்த இடத்தை விட்டு சென்று விட்டதாகவும் அந்த பெண் பதிவிட்டுள்ளார்.

Buy Now on CodeCanyon