இந்தாண்டு நீட் தேர்வில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாள் இருக்கும் என, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உறுதியளித்ததாக, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தகவல் தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டு நடைபெற்ற நீட் தேர்வில் இந்தி மற்றும் ஆங்கில மொழி வினாத்தாள்கள் எளிமையாகவும், மற்ற மாநில மொழி வினாத்தாள்கள் கடினமாகவும் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டன. மேலும், மாநில மொழிகளில் நீட் பாடத்திட்ட புத்தகங்கள் கிடைக்காமல் மாணவர்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். அதேபோல், நீட் தேர்வில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்திலிருந்து மட்டுமே கேள்விகள் கேட்கப்படுவதால், மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலானோர் நீட் தேர்வில் தோல்வியை தழுவும் நிலைக்கு ஆளாகின்றனர்.
அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தமிழகத்தில் அதிகஇடங்களில் வெற்றி பெறும் என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். அதிக இடங்களில் பாஜக வெற்றி பெற்றால் அதிமுகவிற்குதான் பிரச்னை வரும் எனவும் தமிழிசை கூறியுள்ளார்.அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தமிழகத்தில் அதிகஇடங்களில் வெற்றி பெறும் என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். அதிக இடங்களில் பாஜக வெற்றி பெற்றால் அதிமுகவிற்குதான் பிரச்னை வரும் எனவும் தமிழிசை கூறியுள்ளார்.

tamilisai soundararajan press meet