அதிக வெப்பமிக்க 3 ஆண்டுகளில் ஒன்றாகக் கடந்த 2017ஆம் ஆண்டு இருந்ததாக நாசாவின் கோடார்டு ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.

புவியின் வெப்பநிலை குறித்து நாசாவின் ஜிஐஎஸ்எஸ் ஆய்வு அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தியது. அதன்படி பருவநிலை மாற்றம் காரணமாக 2017ஆம் ஆண்டு உலகில் அதிக வெப்பம் பதிவான ஆண்டுகளின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

1880 ஆம் ஆண்டு முதல் உலகில் வெப்பம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதில் அதிக வெப்பம் உணரப்பட்ட ஆண்டாக 2015ஆம் ஆண்டை அறிவித்தது நாசா.

இதைத்தொடர்ந்து எல்நினோ 2016ஆம் ஆண்டும் அதிக வெப்பம் மிக்க ஆண்டாக கருதப்பட்டது. இந்நிலையில் அதிகளவு வெப்பம் பதிவான ஆண்டுகளின் பட்டியலில் மூன்றாவதாக 2017ஆம் ஆண்டும் இடம் பிடித்துள்ளது.

2017 ranked as the second warmest since 1880 says Nasa's GISS. 2015 and 2016 years were in the high tempewture list.