அரசியலில் டைமிங் ரொம்ப முக்கியம் ஆண்டவரே என்று நெட்டிசன்ஸ் கமலிடம் தெரிவித்துள்ளனர். தமிழக அரசு கனத்த இதயத்துடன் பேருந்து கட்டணத்தை ஒரேயடியாக உயர்த்திவிட்டது. அன்றாடம் பேருந்தில் பயணம் செய்யும் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் கூடுதல் பணத்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறார்கள். இந்நிலையில் தமிழகத்தை அடுத்து புதுச்சேரியிலும் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பேருந்து கட்டண உயர்வு குறித்து அரசியலுக்கு வந்துள்ள ரஜினிகாந்தும், கமல் ஹாஸனும் தட்டிக் கேட்க மாட்டார்களா என்று மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இருவரும் அமைதியாக இருந்தனர். கட்டண உயர்வை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்த பிறகு கமல் அது குறித்து நேற்று ட்வீட்டியுள்ளார். அரசியலில் டைமிங் ரொம்ப முக்கியம் ஆண்டவரே. இப்படி லேட்டாகவா ட்வீட் போடுவது என்று நெட்டிசன்ஸ் அவரிடம் ட்விட்டர் மூலம் கேட்டுள்ளனர். <br /> <br />Kamal Haasan has finally tweeted about the increase in bus fare in Tamil Nadu. Superstar Rajinikanth is yet to break his silence over this burning issue.
