Surprise Me!

இரண்டு நிமிடம்…சென்னையே ஸ்தம்பித்தது...வீடியோ

2018-01-30 691 Dailymotion

இரண்டு நிமிடம் மவுன அஞ்சலிக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் சென்னை நகரமே ஒருமணி நேரமாக போக்குவரத்து நெரிசலில் ஸ்தம்பித்தது. <br /> <br />சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று உயிரிழந்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் தினம் ஆண்டு தோரும் இன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தியாகிகள் தினத்தன்று சென்னை காவல்துறை சார்பில் இரண்டு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனால் சென்னை நகர் முழுவதும் இரண்டு நிமிடம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அனைத்து சின்னல்களிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அண்ணாசாலை, கடற்கரைசாலை, நந்தனம், சைதாப்பேட்டை, தி. நகர், கிண்டி, வடபழனி, பாரிமுனை உள்ளிட்ட அனைத்து சாலைகளிலும் இரண்டு நிமிட போக்குவரத்து தடை செய்யப்பட்டதால் பல மணிநேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் ஆமை வேகத்தில் சென்றன. சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேல் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்களை போலீசார் அங்காங்கே சரிசெய்தனர்.

Buy Now on CodeCanyon