நடிகர் விஜய் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிவருகிறார். அதை முடித்தபிறகு விஜய் சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படத்தில் நடிக்கவுள்ளார் எனும் தகவல் வெளியாகி இருக்கிறது. விஜய்யின் 'பூவே உனக்காக', 'லவ் டுடே', 'துள்ளாத மனமும் துள்ளும்', 'திருப்பாச்சி', 'ஜில்லா' ஆகிய படங்களை இந்த நிறுவனம் இதற்குமுன் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனம் ஆர்.பி.சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ். இந்நிறுவனம் விரைவில் தனது 100-வது படத்தை தயாரிக்க உள்ளது. இதில் நடிகர் விஜய் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுதொடர்பாக விஜய்யிடம் பேசியிருப்பதாகவும், அவரும் சம்மதம் சொல்லியிருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது விஜய்க்கு பொருத்தமான கதையை தேர்ந்தெடுப்பதில் இந்த நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறதாம்.

Actor Vijay is currently acting in a film produced by Sun Pictures. This film is directed by AR Murugadas. After completing it, Vijay will be acted in Super good films 100th film.