அண்ணாதுரையின் 49-ஆவது நினைவுதினத்தையொட்டி திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி இன்று நடைபெறுகிறது. அண்ணாதுரையின் நினைவு நாள் ஆண்டுதோறும் பிப்ரவரி 3-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அதன்படி இன்றைய தினம் சென்னை மெரினாவில் உள்ள அண்ணா சமாதியில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச் செயலாளர் க.அன்பழகன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். <br /> <br />அவரது நினைவு தினத்தையொட்டி இன்று மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடைபெறுகிறது. இதில் திமுகவினர் கலந்து கொள்ளவுள்ளனர். <br /> <br />Annadurai's 49th memorial day is observed today. DMK Working President paid his tribute and leads the Peace rally. DMK cadres participates in the rally.