Surprise Me!

மாலத்தீவில் ஆட்சியை கவிழ்க்க முயற்சித்த ஈழத்தின் பிளாட்- முறியடித்த இந்தியா- வீடியோ

2018-02-05 8 Dailymotion

அரசியல் குழப்பம், ஆட்சி கவிழ்ப்பு என்பது மாலத்தீவுக்கு புதியது அல்ல. 1988-ம் ஆண்டு தமிழீழ விடுதலை இயக்கங்களில் ஒன்றான பிளாட், மாலத்தீவில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டது. அதை அதிரடியாக இந்தியா முறியடித்தது என்பது வரலாறு. மாலத்தீல் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அதிபர் யாமின் ஏற்க மறுத்து வருவதால் அரசியல் குழப்பம் உருவாகியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி அரசியல் தலைவர்களை விடுதலை செய்தால் தமது ஆட்சிக்கு ஆபத்து என்பதால் அதை ஏற்க மறுத்து வருகிறார் யாமின். இதனால் அங்கு அசாதாரண சூழல் நிலவுகிறது. மாலத்தீவில் இதற்கு முன்னரும் ஆட்சி கவிழ்ப்பு முயற்சிகள் நடந்துள்ளன. 1988-ம் ஆண்டு அதிபராக கையூம் இருந்தார். கையூமின் ஆட்சியை கவிழ்க்க இலங்கையில் இருந்த மாலத்தீவு தொழிலதிபரான அப்துல்லா லுத்தூபி திட்டமிட்டார் . <br /> <br />

Buy Now on CodeCanyon