வீட்டிற்குள் புகுந்து பெண்னை கொலைசெய்துவிட்டு நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் புதுவையில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது <br /> <br />புதுச்சேரியில் மூலகுளம் ரோஜா நகரை சேர்ந்தவர் பிரபுதாஸ். இவருடைய மனைவி தீபா கணவன் மனைவி இருவரும் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகின்றனர். <br /> <br />வழக்கம் போல் இன்று காலை கணவர் பிரபுதாஸ் வேலைக்கு சென்றுவிட்டார். தீபாவுக்கு இரண்டாவது சிப்ட்டு என்பதால் வீட்டில் இருந்துள்ளார். அப்போது தீபாவின் அப்பா வீட்டுக்கு வந்து பார்த்தபோது தீபா தலையில் வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே அவர் போலீசாருக்கு அளித்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரெட்டியார்பாளையம் போலீசார் தீபாவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் தீபாவின் எதிர் வீட்டை சேர்ந்த சிறீதரன் என்பவன் திருட முயற்சித்துள்ளார் என்றும் தீபாவை கட்டையால் அடித்து விட்டு தாலி செயினால் இறுக்கி கொலை செய்து தாலி செயின் மற்றும் பிரோவில் இருந்த நகை பணத்தையும் கொள்ளையடித்துள்ளார் கொள்ளையன் சிறீதரனை கைது செய்த போலீசார் விசாரணை செய்துவருகின்றனர்