Surprise Me!

தைவான் பூகம்பம்பத்தில் சாய்ந்த 12 அடுக்குமாடி கட்டிடம்- வீடியோ

2018-02-08 7,406 Dailymotion

தைவானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் விண்ணை முட்டும் அளவு உயர்ந்து நின்ற கட்டிடங்கள் ஒரு நொடியில் சரிந்து விழுந்த சீட்டுக்கட்டுகள் போல சாய்ந்து கிடக்கின்றன. மீட்புப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அதிர்வலைகள் தொடரும் என்று அரசு எச்சரிக்கை விடுத்துள்ளதால் மக்கள் பீதியில் உள்ளனர். தைவான் நாட்டின் வட கிழக்கு கடற்கரை பகுதியில் புதன்கிழமை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோளில் 6.4 ஆக பதிவாகியுள்ளது. கடற்கரை நகரமான ஹுவாலியனில் இருந்து வடக்கு திசையில் சுமார் 14 கிலோமீட்டர் தொலைவிலும், கடலுக்கடியில் சுமார் ஒரு கிலோ மீட்டர் ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. <br /> <br />நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து வீடுகளில் இருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். அதி சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கத்தால் வீடுகளில் விரிசல் ஏற்பட்டன. இந்த நிலநடுக்கத்தில் ஹுவாலியன் நகரில் உள்ள ஓட்டல் உள்பட பல்வேறு கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கி சுமார் 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 250க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் சுமார் 60 பேரைக் காணவில்லை என்றும் தைவான் மாநில செய்தி நிறுவனம் கூறுகிறது. <br /> <br />

Buy Now on CodeCanyon