தமிழகத்தில்தான் முதலில் சிஸ்டத்தை சரி செய்ய வேண்டும் என்றும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும் என்றும் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு மே மாதம் ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவதை மறைமுகமாக தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

இது தமிழகத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. மேலும் சில அரசியல்வாதிகள் ரஜினி தனது படத்தை பிரமோட் செய்வதற்காக இதுபோல் ஸ்டென்ட் அடிக்கிறார். அவர் கட்சியெல்லாம் ஆரம்பிக்க வேண்டும் என்றெல்லாம் தெரிவித்தனர்.கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த், தான் அரசியலில் ஈடுபடுவது உறுதி. தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம். சட்டசபை தேர்தலில் கட்சி ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

Rajinikanth says that first of all he has to correct the system in Tamilnadu.Let we decide about to contest in Loksabha election.