நீட் தேர்வு தமிழக மாணவர்கள் மீது ஏவப்படுகிற வன்முறை என்று இயக்குனர் கவுதமன் குற்றம்சாட்டியுள்ளார். நீட் விலக்கு கோரி 2 முறை சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெறவில்லை என்றும் கவுதமன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கவுதமன் கூறியதாவது : நீட் விலக்குக்காக உறுதியான நம்பிக்கையான செயல்திட்டத்தை அரசு முன்எடுக்கவே இல்லை. இது நினைத்து பார்க்க முடியாத அளவு எங்கள் மண் மீதும் மாணவர்கள் மீதும் திணிக்கப்படுகிற வன்முறை. Ads by ZINC தமிழக சட்டசபையில் 2 முறை நீட் விலக்குக்கான தீர்மானம் போட்டு மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்பி வைத்துள்ளது. இந்த சட்டவரைவை மத்திய அரசு மதித்திருக்க வேண்டும். இதனை உடனடியாக குடியரசுத் தலைவரின் பார்வைக்கு அனுப்பி அவரின் ஒப்புதலை பெற்றிருக்க வேண்டியது மத்திய அரசின் கடமை.

Director Gautaman slams state and centre for not take necessary steps to get approval from president for NEET exemption draft which is passed in tamilnadu assembly twice.