புதிய டெண்டர் நடைமுறைக்கு எதிர்பு தெரிவித்து டேங்கர் லாரிகள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தியா முழுவதும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சமையல் காஸை சிலிண்டரில் நிரப்பும் மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியில், தமிழகம், ஆந்திரா, கேரளா, பாண்டிச்சேரி, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய 6 மாநிலங்களை சேர்ந்த 4,200 காஸ் டேங்கர் லாரிகள் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான வாடகை டெண்டரை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகிறது. இந்நிலையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய 3 எண்ணெய் நிறுவனங்களும் 2018-2023க்கான புதிய டெண்டரை அறிவித்துள்ளன.

இந்த புதிய ஒப்பந்த விதிமுறைகள் படி மாநில அளவில் டெண்டர் நடத்தப்பட்டால், டேங்கர் லாரி உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டு வேலைவாய்ப்பை இழக்க நேரிடும் என்பதால் பழைய முறைப்படி டெண்டர் நடத்த வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு உட்பட 6 மாநிலங்களில் டேங்கர் லாரி உரிமையாளர்கள் இன்று காலை 6 மணி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் இதனால் சமையல் எரிவாயு தட்டுபாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Des : The tanker lorry has been involved in an indefinite strike from today to protest the new tender procedure.