காவிரி நதி நீர் வழக்கில் அனுபவம் இல்லாத வழக்கறிஞர்களை வைத்து அதிமுக அரசு வாதிட்டு ஏற்கனவே கிடைத்த 15 டிஎம்சி தண்ணீரை இழந்துள்ளது வெட்க கேடானது என்று துறைமுருகன் கூறியுள்ளார்

வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சித்துணை தலைவருர் துரைமுருகன் தற்போது காவிரி நீர் குறித்த நீதிமன்ற தீர்ப்பானது தமிழகத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் இதன் பாதகமான தீர்ப்பு ஏற்கனவே பெற்ற தீர்ப்பை நீதிமன்றத்தில் வாதாடுகிறோம் என்ற பெயரில் அனுபவம் இல்லாத வழக்கறிஞர்களை வைத்து அதிமுக அரசு வாதிட்டு ஏற்கனவே கிடைத்த 15 டிஎம்சி தண்ணீரை இழந்துள்ளது வெட்க கேடானது வேதனையானது என்றார்

இதற்கு அதிமுக அரசு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்றும் மேலாண்மை வாரியத்திற்கு குடியரசு தலைவர் தான் தலைவராக இருப்பார் என்று தீர்ப்பில் கூறியுள்ளது குழப்பமானது தமிழகத்திற்கு இது பாதகமான தீர்ப்பு இது கர்நாடக அரசுக்கு வெற்றி என்றும் கூறினார்