சசிகலா குடும்பத்தினர் கடும் நெருக்கடியை கொடுத்தனர் என்றும் வேறு யாராவதாக இருந்திருந்தால் தற்கொலை செய்திருப்பார்கள் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். சசிகலா குறித்து ஒரு சதவீதம் மட்டுமே கூறியுள்ளேன் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாள் விழா குறித்த ஆலோசனைக்கூட்டம் தேனியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. <br />