இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் இன்று நடக்கிறது.

இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு இந்தப்போட்டி தொடங்குகிறது.

ஜோகன்ஸ்பர்க்கில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 28 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியிலும் வென்று 20 ஓவர் தொடரை கைப்பற்றும் ஆர்வத்தில் உள்ளது. ஏற்கனவே ஒருநாள் தொடரை 5-1 என்ற கணக்கில் இந்தியா வென்று இருந்தது. டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்து இருந்தது.

india vs sout africa 2nd t20 held on today night