சாவித்ரி கதாபாத்திரத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ் சரியானவர் இல்லை என்று பழம்பெரும் நடிகை ஜமுனா தெரிவித்துள்ளார்.
நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். சாவித்ரியாக கீர்த்தி ஒத்து வர மாட்டார் என்று பலரும் தெரிவித்தனர்.
இந்நிலையில் இது குறித்து பழம்பெரும் நடிகை ஜமுனா கூறியிருப்பதாவது,
நான் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளேன். சாவித்ரியுடன் நடித்தவர்களில் நான் மட்டுமே உயிரோடு உள்ளேன். சாவித்ரியை பற்றி எனக்கு நிறைய தெரியும். அப்படி இருக்கும்போது படம் எடுப்பவர்கள் என்னிடம் எதுவும் கேட்காதது வேதனையாக உள்ளது.
சாவித்ரியாக நடித்துள்ள பெண்ணுக்கு தெலுங்கு தெரியாது. தெலுங்கு தெரியாமல் அவரால் எப்படி சாவித்ரி கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்க முடியும்? தற்போதைய நடிகைகள் அரைகுறை உடையில் நடிக்கிறார்கள். எங்கள் காலத்தில் எல்லாம் அப்படி கிடையாது.
எனக்கு மகன் பிறந்தபோது குழந்தையை தொட்டிலில் போடும் நிகழ்ச்சிக்கு வந்தார் சாவித்ரி. நல்ல கணவர் அமைய புண்ணியம் செய்திருக்க வேண்டும். ஜெமினி கணேசன் என்னை ஏமாற்றிவிட்டார் என்று கூறி என்னை கட்டிப்பிடித்து அழுதார்.
ஜெமினி வேண்டாம் என்று எவ்வளவோ கூறியும் கேட்காமல் நீ தானே அவரை திருமணம் செய்து கொண்டாய் என்று சாவித்ரிக்கு ஆறுதல் கூறினேன். அவருக்கு சென்னையில் 3 பங்களா, கொடைக்கானலில் ஒரு வீடு இருந்தது.
சாவித்ரியை போன்று சினிமாவில் வேறு எந்த ஒரு நடிகையும் சம்பாதிக்கவில்லை. அவர் வீட்டில் நீச்சல் குளம் கட்டினார். மைசூரில் இருந்து சந்தன கட்டைகளை வரவழைத்து பூஜை அறையை உருவாக்கினார்.

Yesteryear actress Jamuna said in an interview that Keerthy Suresh can't do justice to Savithri character in the upcoming movie Mahanathi directed by Nag Ashwin.