சென்னையில் இருக்கும் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரசிகர்களுடன் மீண்டும் ரஜினி சந்திப்பு நடத்தி வருகிறார். ரஜினி தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை கடந்த டிசம்பர் 31ம் தேதி வெளியிட்டார். 2021ல் நடக்க இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார்.

முறையான கட்சி அறிவிப்பு வெளியாகும் வரை ரசிகர்களை தினசரி அரசியல் குறித்து பேச வேண்டாம் என்று கூறியுள்ளார்.

அவர் அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பு வெளியிட்ட பின் கட்சி சின்னம், பெயர் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.