அரகண்டநல்லூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் மீதான தாக்குதல் என்பது தொடர்கதையாகிறது. நேற்றைய தினம் எட்டு வயது சிறுவன் மர்ம நபர்களால் தாக்கப்பட்டதில் உயிரிழந்துள்ளான், அவனது சகோதரியும், தாயாரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். <br /> <br />கணவனை இழந்த 45 பெண் தன்னுடைய மகன் மற்றும் மகளுடன் வேலம்புத்தூர் கிராமத்தில் வசித்து வந்துள்ளார். இவரின் மற்ற 4 பிள்ளைகள் பெங்களூரு மற்றும திருப்பூரில் வேலை செய்து வருகின்றனர். இவர்களின் தந்தை 4 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்த நிலையில் 4 பேரும் வெளியூர்களில் வேலை செய்து தாய்க்கு பணம் அனுப்பி வருகின்றனர். <br /> <br />