Surprise Me!

ஸ்ரீதேவியின் மரணத்திற்கு அஜித், விஜய் வாயையே திறக்கலையே!- வீடியோ

2018-02-26 4,371 Dailymotion

இந்திய சினிமாவின் நடிப்புத் தாரகை ஸ்ரீதேவியின் மரணம் குறித்து அவருடன் கடைசியாக நடித்த நடிகர்களான அஜித் மற்றும் விஜய் எதுவுமே பேசாதது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. நடிகை ஸ்ரீதேவி நேற்று முன்தினம் துபாயில் மரணமடந்தார். அவருக்கு இந்திய திரையுலகமே கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறது. நடிகை ஸ்ரீதேவி மீண்டும் வெள்ளித்திரையில் நடிக்க வந்தபோது, அவருடன் இணைந்து நடித்த டாப் ஹீரோ அஜித். அந்தப் படத்தில் தன்னுடன் நடித்த அஜித் குறித்து ஸ்ரீதேவி வாயாரப் புகழ்ந்தார். ஆனால் இப்போது ஸ்ரீதேவி மரணம் குறித்து அஜித் எதுவுமே தெரிவிக்கவில்லை. அதேபோல, இரு ஆண்டுகளுக்கு முன்பு விஜய் நடித்த புலி படத்தில் முக்கிய வேடத்தில், கதாநாயகிகளுக்கு இணையாக நடித்திருந்தார் ஸ்ரீதேவி. ஆனால் விஜய்யும் குறைந்தபட்சம் இரங்கல் கூடத் தெரிவிக்கவில்லையே என்று அங்கலாய்க்கிறார்கள் ஸ்ரீதேவி ரசிகர்கள். விஜய்யும் அஜித்தும் தமிழ் சினிமாவின் டாப் நடிகர்கள். இருவருமே தங்களுடன் நடித்த ஒரு ஒப்பற்ற நடிகையின் மரணம் குறித்து எதுவும் பேசாமல் இருப்பது ஏனோ? <br />

Buy Now on CodeCanyon