ஸ்ரீதேவியின் உடலை இந்தியா கொண்டு வர என்னென்ன செய்ய வேண்டும் என்று அமீரக நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் நேற்று முன்தினம் இரவு மரணம் அடைந்தார். அவரது உடல் இன்று இரவு மும்பை கொண்டு வரப்படுகிறது.

மதியம் 3.30 மணிக்கு துபாயில் இருந்து தனி விமானம் மூலம் ஸ்ரீதேவியின் உடல் மும்பை கொண்டு வரப்படுகிறது என்று செய்திகள் வெளியாகின.
துபாய் போலீசார் இறப்பு சான்றிதழ் அளிக்க வேண்டும். அதன் பிறகு இந்திய தூதரகம் ஸ்ரீதேவியின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும். பின்னர் இமிகிரேஷன் துறையில் முடிக்க வேண்டிய ஃபார்மாலிட்டிகளை முடிக்க வேண்டும்.
ஸ்ரீதேவியின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்கலாம் என்று பப்ளிக் ப்ராசிகியூட்டர் அனுமதி அளிக்க வேண்டும். அதன் பிறகே அவரின் உடல் விமானம் மூலம் இந்தியா கொண்டு வரப்படும்.