syriya.... யுத்தங்களின் தேசம்.... இரத்தங்களின் பூமி.... மனிதன் வாழ சபிக்கப்பட்ட நகராக மாறிவருகிறது....

லட்சக்கணக்கில் சிறு குழந்தைகளின் இன்னுயிரை தன்னுள்ளே ஏந்திக்கொண்டு மனிதத்தின் மாயணமாக மாறிக்கொண்டிருக்கிறது...

ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான மக்கள் அந்த போரின் அலறல் துயரம் தாள முடியாமல் தங்கள் தேசத்தை விட்டு உடைமையை விட்டு உயிரை காப்பாற்றிக்கொள்ள அகதியாய் வெளியேறுகின்றனர்.... வெளியேற்றப்படுகின்றனர்....

என்ன நடக்கிறது அங்கு ?

2011 இல் தொடங்கிய அதிபர் பஷார் அழ ஆசாத்துக்கு எதிரான கிளர்ச்சியாளர்களின் போர் ஒவ்வொரு நாளும் உக்கிரம் தொட்டது... அப்போதிலிருந்தே மக்கள் கடல் வழி பயணங்களில் அகதிகளாக வெளியேற தொடங்கினர்....

2014 இல் இப்படி தப்பி சென்றவர்களின் படகு கவிழ்ந்து துருக்கி கரையோரத்தில் ஒதுங்கி கிடந்த அயலானின் புகைப்படம் தான் ஒட்டுமொத்த உலகிற்கும் சிரியாவின் கோரா முகத்தை உலகுக்கு காட்டியது......

மீண்டும் கடந்த வருடம் அரசு படைகளின் பயங்கர தாக்குதலினால் இடிந்த இடிபாடுகளுக்கு மத்தியில் தூசுகளுடன் இருந்த அந்த குழந்தை மற்றுமொரு முறை போரின் விளைவை உணர்த்தியது.... இன்று மீண்டும் ஆயிரக்கணக்கான குழந்தைகளின் உடல்களும் அலறல் சத்தமும் தூங்கிக்கொண்டிருந்த உலகின் மனிதத்தை தட்டி எழுப்பியுள்ளது....

ஒவ்வொரு முறையும் தங்கள் மீது நடத்தப்படும் கொடுமைகளை உலகறியச்செய்ய அந்த பிஞ்சு குழந்தைகளின் ஓலங்களே ஒளிக்கவைக்க வேண்டியதாக உள்ளது.... குழந்தைகளின் மீது நிகழ்த்தப்படும் இந்த தாக்குதல்கள் அடுத்த தலைமுறையினரை குறிவைத்து அவர்களை மொத்தமாக அளிக்கவேண்டும் என்ற நோக்கிலேயே நடத்தப்படுவதாக கூறப்படுகிறது....

இந்த பிரச்சனையில் ரஷ்யாவின் நேரடி தலையீடு அதிகரிக்கவுமே விளைவு இன்னமும் விபரீதம் ஆனது....
அரசுப்படை ரஷ்யாவின் உதவியோடு வான்வழி தாக்குதல் மூலம் ரசாயன குண்டை வீசி ஆயிரக்கணக்கான மக்களை கிளர்ச்சியாளர்கள் என்று அழித்தொழித்தது... இன்னமும் அதன்மீது எந்த ஐநாவும் எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை....

அரசு படைக்கு ரஷ்யாவும் கிளர்ச்சியாளர்கள் படைக்கு மற்ற வல்லரசு நாடுகளும் உதவிகொண்டு தங்களுக்குள்ளான பகைமையை இதன் மூலம் தீர்த்துக்கொண்டுள்ளனர்...

இன்று மீண்டும் சிரியாவின் கோரா முகம் உச்சத்தை அடைந்துள்ளது . கடந்த 5 நாட்களில் மட்டும் 600 பேருக்கு மேல் கொல்லப்பட்டுள்ளனர் அதில் பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகள்....

அரசை எதிர்க்கும் கிளர்ச்சி படைக்கும் கிளர்ச்சியை ஒடுக்கும் வல்லரசுகளின் ஆதிக்க படைக்கும் நடுவில் சிக்கி சிரியாவின் எதிர்காலம் உத்திரத்தின் திரவத்தால் கழுவப்பட்டுக்கொண்டிருக்கிறது ......

வல்லரசுகளின் ஆதிக்கத்தின் விளைவுக்கும் அதிகார வேட்கையின் கோர பசிக்கும் சிரியா சமகால வரலாற்று துயரம் ....