ஸ்ரீதேவியின் மரணத்தால் பேரதிர்ச்சியில் இருப்பதாக பாலிவுட் நடிகர் ஜிதேந்திரா தெரிவித்துள்ளார்.
ஸ்ரீதேவி சொல்வா சாவன்(1979) படம் மூலம் பாலிவுட்டில் ஹீரோயின் ஆனாலும் ஜிதேந்திராவுடன் சேர்ந்து நடித்த ஹிம்மத்வாலா(1983) படம் தான் அவருக்கு பெயரும், புகழும் வாங்கிக் கொடுத்தது.
ஹிம்மத்வாலா படத்தில் ரேகா தான் ஹீரோயினாக நடிக்க வேண்டி இருந்தது. அவர் நடிக்க முடியாமல் போக ஸ்ரீதேவி நடித்தார். அந்த படம் மூலம் தான் எனக்கும், ஸ்ரீதேவிக்கும் நல்ல பெயரும், புகழும் கிடைத்தது என்பது அனைவருக்குமே தெரியும்.
ஸ்ரீதேவியின் மரணத்தால் பேரதிர்ச்சி அடைந்துள்ளேன். ஹிம்மத்வாலா படத்திற்கு பிறகே ஸ்ரீதேவியின் மேஜிக்கை பாலிவுட் கண்டுகொண்டது. ஹிம்மத்வாலா ரிலீஸாகி பிப்ரவரி 25ம் தேதியுடன் 35 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அந்த கொண்டாட்டத்திற்கு ஒரு நாளைக்கு முன்பு ஸ்ரீதேவி இறந்துவிட்டார்.
ஸ்ரீதேவி நடித்த தமிழ் படம் ஒன்றின் 100வது நாள் கொண்டாட்ட நிகழ்ச்சியில் தான் நான் அவரை முதலில் சந்தித்தேன். பெரிய அழகிய கண்களுடைய அவரை பாராட்டினேன்.

Bollywood actor Jeetendra said in an interview that the legendary actress passed away one day before the 35th anniversary of their superhit movie Himmatwala.