சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை விட ஸ்ரீதேவி அதிக சம்பளம் வாங்கியிருக்கிறார்.
பாரதிராஜாவின் 16 வயதினிலே படத்தை யாராலும் மறக்க முடியாது. அந்த படத்தில் ஸ்ரீதேவி மயிலு கதாபாத்திரத்தில் நடித்தார். அந்த மயிலு என்ற பெயர் அவர் சாகும் வரை நிலைத்து நின்றது.
வெள்ளை நிற உடையில் ஸ்ரீதேவி செந்தூரப்பூவே பாட்டு பாடியதையும் யாராலும் மறக்க முடியாது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பரட்டையாகவும், உலக நாயகன் கமல் ஹாஸன் சப்பானியாகவும் நடித்திருந்தனர். சந்தைக்கு போகணும் ஆத்தா வையும் காசு குடுன்னு கமல் பேசிய வசனம் மிகவும் பிரபலம்.

யாராவது உன்னை சப்பானின்னு சொன்னா சப்புன்னு அறைஞ்சுடு என்று ஸ்ரீதேவி கமலை பார்த்து கூறிய வசனம் இன்றளவும் பேசப்படுகிறது. 16 வயதினிலேயே நெஞ்சில் நிற்கும் படமாகிவிட்டது.
16 வயதினிலே படத்தில் நடிக்க கமல் ஹாஸனுக்கு ரூ. 27 ஆயிரம், ரஜினிக்கு ரூ. 3 ஆயிரம், ஸ்ரீதேவிக்கு ரூ. 9 ஆயிரம் சம்பளம் கொடுத்துள்ளார் இயக்குனர் பாரதிராஜா.
ஸ்ரீதேவியின் மரண செய்தி அறிந்த ரஜினியும், கமலும் மும்பை சென்று அஞ்சலி செலுத்தினார்கள். ரஜினியுடன் அவரது மனைவி லதாவும் சென்றிருந்தார். கமலின் மகள்கள் ஸ்ருதியும், அக்ஷராவும் தங்களின் அம்மாவுடன் சென்று ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

Sridevi was paid more than Rajinikanth for Bharathiraja's 16 Vayathinile movie. Sridevi acted as Mayilu while Rajini and Kamal acted as Parattai and Sappani.