Surprise Me!

தலைமுறைக்கு ஏற்றவாறு ஸ்ரீதேவி கொடுத்த போஸ்கள்- வீடியோ

2018-03-01 2 Dailymotion

பல ஆண்களின் கனவுக்கன்னியாக இருந்த நடிகை ஸ்ரீதேவி, சமீபத்தில் எதிர்பாராதவிதமாக திடீரென்று மரணத்தை சந்தித்தது, பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. நடிகை ஸ்ரீதேவியின் ஸ்டைலே தனி தான். அன்று முதல் இன்று வரை தனக்கென்று ஒரு ஸ்டைலைப் பின்பற்றி வருபவர் ஸ்ரீதேவி. நடிகை ஸ்ரீதேவிக்கு நடிப்பில் மட்டுமின்றி, ஃபேஷன் துறையிலும் அதிக ஆர்வம் இருந்தது எனலாம். பொதுவாக பெண்கள் திருமணத்திற்குப் பின் அல்லது ஒரு கட்டத்திற்கு மேல் லேட்டஸ்ட் ஃபேஷனைப் பின்பற்றமாட்டார்கள். ஆனால் நடிகை ஸ்ரீதேவியோ, ஒவ்வொரு தலைமுறைக்கும் ஏற்றவாறு தனது ஸ்டைலையும் மாற்றிக் கொண்டு தான் வந்துள்ளார். பொதுவாக நடிகைகள் பத்திரிக்கைகளின் அட்டைப்படங்களில் இடம்பெறுவது சாதாரணமான ஒன்று தான். அப்படி தான் நடிகை ஸ்ரீதேவியும் 1980-களில் இருந்து இன்று வரை பல பத்திரிக்கைளின் அட்டைப்படங்களில் இடம் பெற்றிருந்தார். இப்போது அவரை நினைவுக்கூறும் வகையில், அக்காலத்தில் இருந்து இக்காலம் வரை நடிகை ஸ்ரீதேவி இடம் பெற்றிருந்த பத்திரிக்கைக்களின் அட்டைப்படங்களைக் காண்போம். <br /> <br />Sridevi got featured in several magazines since 1980s and these are best coverages. Have a look. <br /> <br />

Buy Now on CodeCanyon