தனது பிறந்தநாள் அன்று ஜான்வி கபூர் தனது தாயை நினைத்து இன்ஸ்டாகிராமில் உருக்கமான போஸ்ட் போட்டுள்ளார்.

துபாய் சென்ற இடத்தில் நடிகை ஸ்ரீதேவி உயிர் இழந்தார். தாயை இழந்து ஜான்வி கபூரும், குஷி கபூரும் கவலையில் உள்ளனர். தாய் இல்லாமல் முதல் பிறந்தநாள் கொண்டாடினார் ஜான்வி.
தனது பிறந்தநாள் அன்று அவர் இன்ஸ்டாகிராமில் அம்மாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது,

நானும், குஷியும் எங்கள் தாயை இழந்துவிட்டோம். ஆனால் எங்கள் அப்பா தனது வாழ்க்கையையே இழந்துவிட்டார். என் தாய்க்கு அன்பு தான் முக்கியம். அவருக்கு வெறுப்பு, பொறாமை எதுவும் தெரியாது. நாமும் அது போன்று இருப்போமாக.

நாம் அன்பாக இருப்பதை பார்த்து என் தாய் மகிழ்ச்சி அடைவார். கடந்த சில நாட்களாக நீங்கள் காட்டிய அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி. அது எங்களுக்கு நம்பிக்கை, தெம்பு அளித்துள்ளது. அதற்காக உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது.

நீங்கள் சென்ற பிறகு மனதில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அது போகாது என்பது தெரியும். கண்களை மூடினால் உங்களை பற்றிய நல்ல விஷயங்களே நினைவுக்கு வருகின்றது. நீங்கள் மிகவும் அன்பானவர், அதனால் தான் கடவுள் உங்களை அழைத்துக் கொண்டார்.

Sridevi's sudden death has shaken up the entire nation. The actress passed away, on February 24, 2018. Her daughter Janhvi Kapoor has paid a heartbreaking tribute to her mother in an open letter.