20 லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததால் மனம் நொந்து போன நர்ஸ் ஒருவர் ஓடும் மின்சார ரயிலில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

சென்னையில் பாரிமுனை ஜார்ஜ்டவுன் பிடாரியார் கோவில் தெருவைச் சேர்ந்த கீதா செல்வரங்கம் தம்பதிகளின் மகள் ஜீவிதா,25. நர்சிங் கோர்ஸ் முடித்துள்ள இவர் அப்பல்லோ மருத்துவமனையில் மருத்துவ உதவியாளராக பணியாற்றி வந்தார்.

கடந்த 2016ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11ஆம் தேதியன்று ஆவடி சேக்காட்டைச் சேர்ந்த முரளி என்பவரின் மகன் ரோஸ் உடன் திருமணம் நடைபெற்றது. சாப்ட்வேர் இன்ஜினியரான ரோஸ் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு வைசாலி என்ற பெண் குழந்தை இருக்கிறார். மார்ச் 5ஆம் தேதியன்று மகள் வைசாலிக்கு பிறந்தநாளாகும். மகளின் பிறந்தநாளைக் கூட கொண்டாட இன்று ஜீவிதா உயிரோடு இல்லை.