<br />இலங்கையில் உள்ள கண்டியில் முஸ்லீம் மற்றும் சிங்கள இனத்தவரிடையே பெரும் மோதல் மூண்டுள்ளது. கலவரம் பரவாமல் தடுக்க காவல்துறையினர் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. <br /> <br />கடந்த மாதம் 27ஆம் தேதியன்று இலங்கையில் உள்ள அம்பாறை மாவட்டத்தில் முஸ்லீம்களின் வழிபாட்டு தலங்களில் தாக்குதல்கள் நடைபெற்றது. இதற்கு பதிலடி தரும் விதமாக முஸ்லீம் சமூகத்தினர் தாக்குதல் நடத்தினர்.