பாலிவுட் மட்டுமின்றி ஹாலிவுட்டிலும் பிரபலமானவர் இர்ஃபான் கான். இவர் நடித்திருந்த 'ஜுராசிக் வேர்ல்ட்', 'லைஃப் ஆப் பை' ஆகிய படங்கள் உலக அளவில் சூப்பர் ஹிட் ஆனவை.
இந்நிலையில் இர்ஃபான் கான் தற்போது ஒரு அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள அவர் தனக்கு ஒரு அரிய வகை நோய் வந்திருப்பதாகவும், அது உறுதியானதும் நானே ஒரு வாரம் கழித்து அறிவிக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
பாலிவுட்டின் பிரபல நடிகரான இர்பான் கான், 'ஜுராசிக் வேர்ல்ட்' உள்ளிட்ட சில ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். இர்ஃபான் கான் கடந்த 15 நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார்.
தான் ஓர் அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார் இர்ஃபான் கான். நான் விட்டுக் கொடுக்காமல் போராடுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.

Bollywood actor Irfan khan suffers with rare disease. Irfan said this news on twitter.